search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலம் மாநகராட்சியில் 709 வாக்குச்சாவடிகளில் அமைதியான ஓட்டுப்பதிவு

    சேலம் மாநகராட்சியில் உள்ள 709 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது.
    சேலம்:

    சேலம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் சூரமங்கலம் மண்டலத்தில் 14 வார்டுகள், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 14 வார்டுகள், அம்மாப்பேட்டை மண்டலத்தில் 16 வார்டுகள், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 16 வார்டுகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த 60 வார்டுகளில் 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் மாலை 5 மணியுடன் ஓட்டுபோடும் நேரம் முடிவடைகிறது. அதன் பிறகு 5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனா தொற்று உள்ளவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதனால் காலை 7  முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்கள்   விறுவிறுப்பாக சென்று  ஓட்டு போட்டு வந்தனர்.  மதியம் 1 மணிக்கு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள்  கூட்டம் குறைந்து காணப்பட்டது.  இருப்பினும் 2 மணிக்கு பிறகு  வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

    பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளில் தங்களது அன்றாட சமையல் வேலையை முடித்து விட்டு வெயில் தாக்கம் குறைந்தபிறகு மாலை 3 மணிக்கு  வாக்குச்சாவடி  மையங்களுக்கு வந்தனர்.  அதுபோல் காலையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என கருதி  வாக்குச்சாவடிகளுக்கு மாலை 4 மணி அளவில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்தனர்.  

    மாலை நேரத்தில்  வந்தவர்கள்   நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் உடனுக்குடன் ஓட்டு போட்டு விட்டு சென்றனர்.  குறிப்பாக  சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் இன்று  விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாட்டினையும் துறையின் கண் ஒளியியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்சுடர்  செய்திருந்தார்.
    Next Story
    ×