search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் தேனாம்பேட்டையில் வாக்களித்தனர்.
    X
    உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் தேனாம்பேட்டையில் வாக்களித்தனர்.

    சட்டமன்ற தேர்தல் வெற்றியை விட இந்த தேர்தலில் மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள்- உதயநிதி ஸ்டாலின்

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உங்களை கத்துக்குட்டி என்று சொல்கிறாரே என நிருபர்கள் கேட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் சிரித்துக்கொண்டே கும்பிட்டபடி பதில் கூறாமல் சென்று விட்டார்.
    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இன்று காலையில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி கிருத்திகாவும் வந்து வாக்களித்தார்.

    வாக்களித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் எவ்வளவு பெரிய வெற்றியை தி.மு.க.வுக்கு தந்தார்களோ அதைவிட மிகப்பெரிய வெற்றியை இந்த தேர்தலில் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    நான் கடந்த 10 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொண்டேன். ஒரு நல்ல வரவேற்பு இருந்தது.

    ஆட்சிக்கு வந்த 9 மாதத்தில் தலைவர் (மு.க.ஸ்டாலின்) கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இருக்கட்டும், கொடுத்திருக்க கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக இருக்கட்டும், அதற்கெல்லாம் தமிழக மக்கள் சரியான ஒரு அங்கீகாரத்தை உள்ளாட்சி தேர்தலில் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

    கேள்வி:- கடந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் தி.மு.க. எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இந்த தேர்தலில் நீங்கள் கூடுதலாக பிரசாரம் செய்திருக்கிறீர்களே வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

    பதில்:- வெற்றிவாய்ப்பு நன்றாக இருக்கிறது. பொதுமக்கள் ரியாக்‌ஷன் சிறப்பாக உள்ளது. மேற்கு மண்டலத்தில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

    கேள்வி:- கோவையில் ஆளுங்கட்சி கொலுசு, பணம் உள்ளிட்டவைகளை கொடுத்து வருவதாக எஸ்.பி.வேலுமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டாரே?

    பதில்:- அதற்கு அவர் ஆதாரத்தோடு எதுவும் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக தோல்வி பயத்தில் சொல்லி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உங்களை கத்துக்குட்டி என்று சொல்கிறாரே என நிருபர்கள் கேட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் சிரித்துக்கொண்டே கும்பிட்டபடி பதில் கூறாமல் சென்று விட்டார்.

    Next Story
    ×