search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இஸ்லாமியா பள்ளியில் அமைய உள்ள வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் சங்கர்லால் குமாவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    X
    இஸ்லாமியா பள்ளியில் அமைய உள்ள வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் சங்கர்லால் குமாவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வாக்குச்சாவடியில் கலெக்டர் ஆய்வு

    கீழக்கரையில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம் ஆகிய 4 நகராட்சிகள், அபிராமம், கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், சாயல்குடி, தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள் என மொத்தம் 11 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 19ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

    இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ந்தேதி தொடங்கியது. கீழக்கரை நகராட்சியில் 43 வாக்குச்சாவடிகளில், 13 வாக்குச்சாவடிகள்  பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 2 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி வாக்குச்சாவடியில் ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி பாதுகாப்பு குறித்தும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்   குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

    இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஊழியர்களிடம் பொதுமக்களின் வருகை குறித்து கேட்டறிந்தார். துணை தாசில்தார் பழனிக்குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் சென்றனர்.
    Next Story
    ×