
சுரண்டையை அடுத்த கீழச்சுரண்டையை சேர்ந்தவர் அம்மாபொன்னு (வயது47). இவரது மகள் அருள்மாரி என்ற ஆனந்தி (25).
இவருக்கும் கொடைக்கானல் டானாபுரத்தை சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆனந்தி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக சிகிச்சை பெறுவதற்கு தனது பெற்றோர் வீட்டுக்கு அவர் வந்தார்.
காரையாறு பகுதியில் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சாப்பிட்டு வந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அவரை சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.