
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் பூமாரி (வயது 16). இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு தந்தையின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை அவரது அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்கொலை செய்த சிறுமியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரித்ததாக கிராமநிர்வாக அலுவலர் விஜயலெட்சுமி கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.