என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போலீசார் அழைப்பிதழை சரிபார்த்த காட்சி.
  X
  போலீசார் அழைப்பிதழை சரிபார்த்த காட்சி.

  நெல்லையில் சுபநிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ்களை காண்பித்து சென்ற பொதுமக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முழு ஊரடங்கான இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் நெல்லையில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் பங்கேற்பதற்காக அழைப்பதழ்களுடன் சென்ற பொதுமக்கள், போலீசாரிடம் காண்பித்து சென்றனர்.
  நெல்லை:

  முழு ஊரடங்கான இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் நெல்லையில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  ஏற்கனவே சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்று சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக அழைப்பிதழ்களை கையில் வைத்திருக்க வேண்டும். போலீசார் கேட்கும்போது அதனை காண்பித்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நெல்லையிலும் இன்று சில மண்டபங்கள் மற்றும் கோவில்களில் நடந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அழைப்பதழ்களுடன் பொதுமக்கள் வாகனங்களில் சென்றனர்.

  ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அழைப்பிதழ்களை காண்பித்து அவர்கள் சென்றனர்.
  Next Story
  ×