என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாலை சீரமைப்பு பணி நடந்த காட்சி.
  X
  சாலை சீரமைப்பு பணி நடந்த காட்சி.

  பாளை மண்டல பகுதியில் சாலை சீரமைக்கும் பணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை மாநக பகுதியில் குடிநீர் குழாய் பணி, பாதாள சாக்கடை திட்ட பணி காரணமாக சேதமடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
  நெல்லை:

  நெல்லை மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  நெல்லை மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை நிறைவேற்றும் பொருட்டு ரூ.743.86 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பகுதி-2, பகுதி-3 மற்றும் ரூ.295.00 கோடி மதிப்பீட்டில் அரியநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் ஆகிய 3 திட்டப்பணிகளும் நடைபெற்று வருகிறது.

  இதன் காரணமாக மாநகர பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகள் அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு சாலைகள் திட்டம், நகர்ப்புற சாலைகள் மேம்படுத்தும் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற உறுதி செய்த வளர்ச்சி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் சாலை சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று கொண்டு இருக்கின்றது.

  தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாநகர பகுதியில் சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏதுவாக துறை மூலம் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

  பாளை மண்டல பகுதிக்குட்பட்ட ரெயில்வே பீடர் ரோடு, வண்ணார்பேட்டை சாலைத்தெரு, கைலாசபுரம், மீனாட்சிபுரம், சித்த மருத்துவக்கல்லூரி சாலை, தெற்கு ரதவீதி மற்றும் அண்ணா சாலை போன்ற பல்வேறு இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

  மேலும், மாநகரில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிடும் பொருட்டு மாநகராட்சி மூலம் தற்காலிக சாலை சீரமைப்பு பணிகளை துறை மூலம் தொடர்ந்து மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

  எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணி களை நிறைவேற்ற ஏதுவாக மாநகராட்சிக்கு உரிய ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×