search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைமறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி
    X
    சாலைமறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி

    நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.-தி.முக. கடும் வாக்குவாதம்

    நிலக்கோட்டை யூனியன் தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரத்தில் கடும் மோதல் ஏற்பட்டது
    நிலக்கோட்டை:
     
    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் தலைவர் ரெஜினா நாயகம், துணைத் தலைவர் யாகப்பன் ஆகியோர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ காசி செல்வி தலைமையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த நேரடி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது தலைவர் ரெஜினா நாயகம், துணைத்தலைவர் யாகப்பன் உட்பட 20 ஒன்றிய கவுன்சிலர் களும் வந்தனர். அதனைத் தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கவுன்சிலர்கள் கொண்டு வந்தனர்.

    இது குறித்து விவாதம் தற்போது நடைபெற உள்ளது என்றும் அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் ஆர்.டி.ஓ. தெரிவித்தார். இந்த வாக்கெடுப்பை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து அனைத்து கவுன்சிலர்களும் ஒப்புத லோடு வாக்களித்தனர். பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    முதலில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பை எண்ணிக்கையின் போது 6 வாக்குகள் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. தி.மு.க.வினர் 14 வாக்குகள் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன் மீது நம்பிக்கை இல்லா கொண்டுவரப்பட்ட வாக்குகள் குறித்து எண்ணிக்கையின் போது தி.மு.க.வினர் திடீரென எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசி செல்வி வாக்கு எண்ணிக் கையை நிறுத்திவிட்டு வாக்குப் பெட்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திலிருந்து விரைந்து சென்றுவிட்டார். இதனால் தி.மு.க.வினர் ஆத்திரமடைந்து உடனடியாக கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    தன் பின்னர் அ.தி.மு.க. ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன் தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் நடந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    அப்போது தி.மு.க.வினர் அத்துமீறிய அ.தி.மு.க.வினரை தாக்க முயன்றனர். ஆர்.டி.ஓ. எந்தவிதமான அறிவிப்பும் இன்றியும் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் கொண்டு திண்டுக்கல் சென்றுவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் தேன் மொழி எம்.எல்.ஏ. தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரன் தலைமையில் போலீசார் அ.தி.மு.க.வினரை சமாதானப் படுத்தி இதுகுறித்து  உரிய நடவடிக்கை மேற்கொள் ளப்படும் ஆகையால் எக்காரணம் கொண்டும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதை ஏற்று மறியல் கைவிடப்பட்டது.

    அப்போது தேன்மொழி எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியதாவது:-
    தற்போது நடைபெறும் ஆட்சி ஜனநாயக ஆட்சி என்று தி.மு.க.வினர் கூறிவருகிறார்கள். ஆனால் இங்கு நடப்பதை பார்த்தால் ஜனநாயகம் என்பது மிகப்பெரிய அளவில் மறுக்கப்படுகிறது.

    நிச்சயமாக ஒரு உயர்மட்ட அதிகாரி தலைமையில் தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க.வினர் ஏற்று தேர்தலை சந்தித்தபோது வாக்கு எண்ணிக்கையை தி.மு.க.வினரே தடுத்து நிறுத்தி உள்ளனர் என்றால் சட்டம் ஒழுங்கு எந்த அளவில் இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார்.
    Next Story
    ×