என் மலர்

  நீங்கள் தேடியது "Dindigul News"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாணார்பட்டி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
  குள்ளனம்பட்டி:

  சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிபட்டியைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன் (28).ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 20-ந் தேதி பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்காததால் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

  அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர்.

  இந்த நிலையில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் ஆட்டோ டிரைவர் சங்கிலி முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்கட்சியை திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
  திண்டுக்கல்:

  திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைவிளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் விசாகன் திறந்து வைத்தார்.

  தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவ திட்டம் கொரோனா தொற்று காலத்தில் குழந்தைகளின் கல்வி கற்றல் இடைவெளி, இழப்புகளைக் குறைத்திடும் வகையில்  இல்லம் தேடிக் கல்வித்திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மாபெரும் தனியார்த்துறை வேலை–வாய்ப்பு முகாம்கள், ஏழை எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு–கிறது.

  மேலும்  உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டம், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, சுயஉதவிக்குழுக்களின் கூட்டுறவுத்துறை கடன் தள்ளுபடி மற்றும் 5 பவுன் வரை தங்க நகைக்கடன் தள்ளுபடி திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகை–யில் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தது.

  தமிழ்நாடு முதல்-அமைச்சர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய புகைப்படங்களும் இடம் பெற்று இருந்தது.

  மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் ஆகியோர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன.

  பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
  ×