என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பராமரிப்பு பணி - 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  22-ந்தேதி (சனிக்கிழமை) முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  திருப்பூர்:

  பராமரிப்பு பணி காரணமாக திருப்பூர் மாநகரில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

  இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும் இரண்டாவது குடிநீர் திட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் இன்று 20-ந்தேதி நாளை 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட உள்ளது .
   
  எனவே திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1-க்குட்பட்ட வார்டு 1,5,11 , மண்டலம் 3 -க்குட்பட்ட வார்டு 42,43,44,45 மற்றும் மண்டலம் 4க்குட்பட்ட வார்டு 50 , 51 ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை 21-ந்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது . 

  22-ந்தேதி (சனிக்கிழமை) முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×