search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திமுக
    X
    திமுக

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோவையில் தி.மு.க. நிர்வாகிகளிடம் நேர்காணல்- அமைச்சர் தலைமையில் நடந்தது

    தி.மு.க. சார்பில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

    கோவை:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரிரு தினங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பா ர்க்கப்படுகிறது.

    கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் மிக வேகமாக நடந்து வருகிறது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. தற்போது கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர மொத்தமுள்ள 100 வார்டுகளில் 50 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகராட்சியை கைப்பற்றும் முனைப்பில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சியினர் உள்ளனர்.அதற்கான வேலைகளை சில மாதங்களுக்கு முன்பே 2 கட்சியினரும் கோவை மாநகர பகுதிகளில் தொடங்கி செய்து வருகின்றனர்.

    தி.மு.க. சார்பில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

    விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி இன்று காலை கோவை பீளமேட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடந்தது. நேர்காணல் நிகழ்ச்சிக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், பையா என்ற கிருஷ்ணன், சி.ஆர்.ராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, வரதராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    நேர்காணலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர், மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்த தி.மு.க. கட்சியினர் ஒவ்வொருவரிடமும் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தனித்தனியாக நேர்காணல் நடத்தினர்.

    அவர்களிடம் தங்கள் பகுதிகளில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது. மக்கள் மத்தியில் வேட்பாளர் நன்கு அறிமுகமானவரா, எந்த வார்டில் போட்டியிட விரும்புகிறீர்கள், அங்கு நீங்கள் ஆற்றிய மக்கள் பணி என்ன என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    தி.மு.க நேர்காணலானது இன்றும், நாளை மறுநாளும்(22-ந் தேதி) நடக்கிறது.

    நேர்காணல் முடிந்ததும், அதில் பங்கேற்றவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தலைமைக்கு கொண்டு செல்லப்படும். தலைமை உத்தரவுப்படி வார்டு ஒதுக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×