என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  களக்காடு அருகே தொழிலாளியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). கூலி தொழிலாளி.

  அதே ஊரை சேர்ந்த சுண்டல் முருகன் என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது குறித்து கண்ணன் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

  சம்பவத்தன்று சுண்டல் முருகனுக்கு ஜாமீன் கையெழுத்திட அதே ஊரை சேர்ந்த மற்றொரு முருகன் சென்றார்.  அப்போது அவருக்கும், கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த முருகன், கண்ணனை கல்லால் தாக்கினார். இதனால் கண்ணன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

  இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×