என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
விசைத்தறி கூலி உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்
ஒப்பந்தம் செய்யப்பட்ட கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள கொசவம்பாளையம் பிரிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விசைத்தறி கூலி பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம் ஒன்றியச் செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் கூலி உயர்வு பிரச்சினை குறித்து விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத் தலைவர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர் .
பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர். அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தம் செய்யப்பட்ட கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Next Story