search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சாலை விதிகளை மீறிய 4,728 பேர் மீது வழக்கு

    தென்காசி மாவட்டத்தில் விபத்தை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுரையின்படி பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களான 14,15,16 ஆகிய 3 நாட்களில் சாலை விதிகளை மீறியதாக 4,728 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் விபத்தை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுரையின்படி பொங்கல் பண்டிகை நாட்களான 14,15,16 ஆகிய 3 நாட்களில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.2,898 மதிப்பிலான புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.400 மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மது பாட்டில்களை விற்பனை செய்த 117 பேர் மீது பதுக்கி வைத்து வழக்குப்பதிவு செய்து 1,268 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.300 மதிப்பிலான லாட்டரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    வாகனத்தை அதிவேகமாக இயக்கிய வழக்கில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் 230 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

    செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டிய வழக்கில் 44 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற வழக்கில் 152 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இருக்கை பெல்ட்டுகள் அணியாமல் வாகனம் ஓட்டிய வழக்கில் 370 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,803 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×