என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  சங்கரன்கோவிலில் சாலை விபத்துகளில் 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சங்கரன்கோவில் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த 2 விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவில் அருகே உள்ள பாறைப்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 74). 

  இவர் நேற்று கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள அழகு நாச்சியார்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். 

  தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவல் அருகே உள்ள பச்சேரியை சேர்ந்தவர் சின்னதுரை (24). இவர் பெருமாள்பட்டியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். 

  இன்று காலை பெருமாள்பட்டியில் டீ சாப்பிடுவதற்காக சென்றபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இவர் மீது மோதியது. 

  இதில் காயமடைந்த சின்னத்துரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். 

  இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×