search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.
    X
    பாளையில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.

    டி.என்.பி.எஸ்.சி. புள்ளியியல் சார்நிலை தேர்வு -நெல்லை மாவட்டத்தில் 753 பேர் தேர்வு எழுதவில்லை

    டி.என்.பி.எஸ்.சி. சார்பில் இன்று நடைபெற்ற புள்ளியியல் சார்நிலை தேர்வுக்கு நெல்லை மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 753 பேர் தேர்வு எழுதவில்லை.
    நெல்லை:

    டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது.

    கொரோனா முழு ஊரடங்கு காரணமாக அன்று தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுதுவதற்காக 3,553 பேர் விண்ணப்பதிருந்தனர். 

    இதற்காக நெல்லை, பொதிநகர், பெருமாள்புரம், மேலப்பாளையம், ஐகிரவுண்டு, ரகுமத்நகர், முருகன்குறிச்சி உள்ளிட்ட  மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 

    அங்கு தேர்வு எழுத வந்தவர்களுக்காக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி இருந்தனர். தேர்வு எழுதுவதற்காக இன்று காலை 8 மணி முதலே மையங்களின் முன்பு திரண்டனர். 

    கொரோனா காலகட்டத்தையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரின் உடல் வெப்ப பரிசோதனையும் சோதனை செய்யப்பட்ட பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 

    தொடர்ந்து அவர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டது.

    பின்னர் சமூக இடைவெளியுடன் அவர்கள் அமர வைக்கப்பட்டு தேர்வு எழுதினர்.இன்று காலை, மாலை என 2 கட்டமாக தேர்வு நடைபெற்றது. 

    இன்று 2,800 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 753 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது 78.80 சதவீதம் ஆகும். தேர்வு மையங்களில் அதிகாரிகள் பார்வையிட்டு கண்காணித்தனர்.
    Next Story
    ×