search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் பொங்கலிட மண்பானைகளை ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.
    X
    திருப்பூரில் பொங்கலிட மண்பானைகளை ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.

    பொங்கல் பண்டிகை - களை கட்டும் காய்கறி சந்தைகள்

    திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
    திருப்பூர்:

    பொங்கல் பண்டிகை தமிழர்களின் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 4 நாட்கள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாள் வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். முதல் நாள் காப்பு கட்டுதலுடன் தொடங்கி பொங்கல் திருவிழா, மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படும். 

    பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. புதுமண தம்பதிகளுக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக பெற்றோர்கள் காய்கறிகள், பாத்திரங்கள், பழங்கள், கரும்புகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர். 

    இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் காய்கறி மார்க்கெட்டுகள் களை கட்ட தொடங்கியுள்ளன.  
    Next Story
    ×