search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிவகிரி-கருப்பாநதி பகுதியில் மழை

    தென்காசி மாவட்டத்தில் சிவகிரி மற்றும் கருப்பாநதி பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது.
    தென்காசி:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து உள்ளது. மழைக்காலம் முடிந்த பிறகும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது.

    நேற்று அதிகபட்சமாக சிவகிரியில் 8 மில்லி மீட்டர் மழை பெய்தது. கருப்பாநதி அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும், பாபநாசம் அணை பகுதியில் 1 மில்லி மீட்டரும் மழை பெய்தது. 

    தொடர்ந்து பல்வேறு பகுதி களில் வானம் மேகமூட்டமாக காணப் பட்டது. சில இடங்களில் சாரல் துளிகள் விழுந்தன. 

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்கசிவு காரணமாக தொடர்ந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 452 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து வினாடிக்கு 705 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

    இன்று காலை அணையின் நீர்மட்டம் 132.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 140.98 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 122 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 260 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.73 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், நம்பியாறு, கொடுமுடியாறு அணைகளுக்கும் குறைந்த அளவில் தண்ணீர் வரத்து உள்ளது.
    மேற்கண்ட அணைகளில் இருந்து பாசனத்திற்கும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 
    Next Story
    ×