search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லையில் இன்று 73 பேருக்கு கொரோனா

    நெல்லையில் இன்று புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினந்தோறும் உயர்ந்த வண்ணம் உள்ளது. 

    நேற்று 21 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் மட்டும் 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக மாநகர பகுதியில் மட்டும் 37 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர அம்பையில் 8 பேருக்கும், பாளையில் 7 பேருக்கும், ராதாபுரத்தில் 5 பேருக்கும், மானூரில் 4 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

    மேலும் பாப்பாக்குடி, வள்ளியூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தலா 3 பேருக்கும், களக்காட்டில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது. 

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவ மனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுதவிர தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இன்றைய பாதிப்பில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். இதில் ஆரம்பகட்ட பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து வீட்டிலேயே தனிமைப் படுத்தும் நடவடிக்கையும் சுகாதாரத் துறையால் எடுக்கப்பட்டு வருகிறது. 

    மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

    மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஏ.டி.எம்., பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×