search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை (கோப்பு படம்)
    X
    ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை (கோப்பு படம்)

    தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு - அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் நாளை முதல் அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

    கொரோனா தடுப்பு பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கினர். 

    பொழுதுபோக்கு பூங்கா

    இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை  விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×