search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் செந்தில் பாலாஜி
    X
    அமைச்சர் செந்தில் பாலாஜி

    டாஸ்மாக் பார் டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றுள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி

    டாஸ்மாக் பார் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் 68 விதிகளுடன் டெண்டர் விடப்பட்டு இருக்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    டாஸ்மாக் பார்கள் டெண்டர் தொடர்பாக விதிமீறல்கள் நடந்துள்ளதாக கூறி பார் உரிமையாளர்கள் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

    இதற்கு விளக்கம் அளித்து செந்தில்பாலாஜி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் பார்களை டெண்டர் விட்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக கூறி எனது வீட்டு முன்பு இன்று திரண்டனர்.

    அவர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை அவர்கள் தெரிவித்தனர். அதற்கு நான் விளக்கம் அளித்தேன்.

    டாஸ்மாக் பார் டெண்டர்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றுள்ளன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் 68 விதிகளுடன் டெண்டர் விடப்பட்டு இருக்கிறது.

    டாஸ்மாக் பார்

    ஆனால் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் பார் கட்டிடத்தின் சான்று எங்களிடம் உள்ளது என கூறி அதனை மட்டுமே பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். 1,550 கடைகளுக்கு டெண்டர் விடப்பட்டு இருக்கிறது.

    இடையில் விடுமுறை நாட்கள் வந்ததால் டெண்டர்களை பிரித்து பார்க்க முடியவில்லை. இன்று அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. எந்த முறைகேடும் இன்றி பார்கள் ஏலம் விடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×