search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் பார்"

    • பார்களில் தின்பண்டங்கள் விற்பதற்கும் காலி பாட்டில்களை சேகரித்து கொடுப்பதற்கும் டெண்டர் விடப்படும்.
    • சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு இன்று இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2000 கடைகளில்தான் பார்கள் இயங்கி வருகின்றன.

    மீதமுள்ள மதுக்கடைகளில் பார்கள் கிடையாது. விதிகளை மீறி அங்கு பார்கள் செயல்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படுகின்றன.

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பார்கள் இல்லாததால் மது பிரியர்கள் கடைகள் முன்பு ரோட்டில் நின்றபடி மது அருந்தும் நிலை நீடித்து வருகிறது.

    சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பார்கள் டெண்டர் விடப்படவில்லை. பார்களில் தின்பண்டங்கள் விற்பதற்கும் காலி பாட்டில்களை சேகரித்து கொடுப்பதற்கும் டெண்டர் விடப்படும். இதுவரையில் நேரடி டெண்டர் முறை இருந்து வந்தது.

    தற்போது இ-டெண்டர் முதன்முதலாக விடப்பட்டு உள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு இன்று இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    இந்த மாத இறுதியில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு பார்கள் நடத்த யார் அதிகபட்ச டெண்டர் குறிப்பிட்டு இருக்கிறார்களோ அவர் களுக்கு பார்கள் நடத்த அனுமதியளிக்கப்படும். நவம்பர் மாதத்தில் பார்கள் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்கள் செயல்படாததால் அரசுக்கு பலகோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    பார் உரிமையாளர்களும் நீண்ட நாட்களாக டெண்டர் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது டெண்டர் விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நயினார்குளத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • நயினார்குளம் சாலை பகுதியில் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொன்டர் சன்னதி கோவிலில் இருந்து ஆர்ச் பகுதியை இணைக்கும் சாலையில் நயினார்குளம் உள்ளது. டவுன் பகுதியில் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    தச்சநல்லூர் மண்ட லத்திற்குட்பட்ட நயினார்கு ளமானது 2007-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமாரிப்பு இல்லாததால் டவுன் நயினார்குளம், குப்பைகளின் கூடாரமாகவே இருந்தது. இதனால் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.14.68 கோடி செலவில் நயினார்குளம் கரைப்பகுதிகளை, மேம்படுத்தி கண்கவரும் அழகிய நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

    அதன்பின்னர் பணிகள் தொடங்கி தற்போது குளக்கரை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கம்பி வேலிகளும், எதிர்புறம் தடுப்பு சுவர் அமைத்தும், நடுவில் அழகிய நடைபாதைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட் சாலையில் ஓரளவு பணிகள் முடிந்த நிலையில், நயினார்குளம் சாலை பகுதியில் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    இந்த நடைபாதையின் நடுவில் குடிநீர் வசதி, உணவு அறை, கழிப்பிட வசதி, பாதுகாப்பு அறை மற்றும் குழந்தைகளுக்கான கேளிக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. முறையான பராமரிப்பின்மையால் 12 அடி வரை ஆழம் இருந்த இந்த குளம் தூர்வாராததால் 4 அடிக்கும் குறைவான ஆழம் கொண்ட குட்டையாக மாறிவிட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    இதன் காரணமாகவே நயினார்குளத்தில் படகு குழாம் அமைக்க முடியாத நிலை உள்ளது. தற்போது இருக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் அமலைச்செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சுத்தமல்லி அணைக்கட்டு சென்றடைந்து, அங்கிருந்து கால்வாய் மூலம் நயினார் குளத்திற்கு தண்ணீர் வரும். ஆனால் தூர்வாரப்படாததால் தேவையான அளவு தண்ணீரை சேமிக்கும் திறனை குளம் இழந்துள்ளது. இதனால் இந்த குளத்தில் மூலம் பாசனம் பெறும் விவசாய நிலங்களும் வெகுவாக குறைந்துள்ளன.

    குளத்தின் அருகே உள்ள அரசு மதுபானக்கடையில் மது வாங்கும் பலரும் நயினார் குளத்தை பார் ஆக மாற்றி வருகின்றனர். அங்கு வைத்து குடித்துவிட்டு மதுபாட்டில்களை குளத்திற்குள் வீசிவதோடு, சாலைகளிலும் போதையில் தடுமாறி வருகின்றனர். சில நேரங்களில் போதையில் நயினார்குளம் சாலையில் சிலர் படுத்துவிடு கின்றனர் என்றும் அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர். எனவே நயினார் குளம் சாலையில் குடிமகன்கள் மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குளத்தை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


    நயினார்குளத்தில் அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளதை படத்தில் காணலாம்.

    நயினார்குளத்தில் அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளதை படத்தில் காணலாம்.


     


    • தென்காசி-பழைய குற்றாலம் சாலையில் உள்ள ஆயிரப்பேரி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
    • பாரில் வேலை பார்க்கும் வசந்த் என்பவர் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தென்காசி:

    தென்காசி-பழைய குற்றாலம் சாலையில் உள்ள ஆயிரப்பேரி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஒட்டி பார் உள்ளது.

    நேற்றிரவு வழக்கம்போல் பாரை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். அப்போது சில மர்ம நபர்கள் பாருக்குள் புகுந்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த ரூ.58 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்தனர்.

    இதுகுறித்து பாரில் வேலை பார்க்கும் வசந்த் என்பவர் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    • தஞ்சாவூரில் பாரில் மதுபானம் வாங்கி அருந்திய 2 பேர் பலியாகினா்.
    • 4 குழுவினா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

    திருப்பூர் :

    தஞ்சாவூரில் பாரில் மதுபானம் வாங்கி அருந்திய 2பேர் பலியாகினா். இதனைத் தொடா்ந்து தமிழக முழுவதும் சட்டவிரோதமாக செயல்படுகிற பாா்கள் மற்றும் போலி மது விற்பனை செய்கிற பாா்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அதிகாரிகள் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனா்.

    திருப்பூா் மாவட்டத்திலும் சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தை சோ்ந்த அதிகாரிகள் என 4 குழுவினா் பிரிந்து சென்று அவிநாசி, தாராபுரம், காங்கேயம், திருப்பூா் உள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது பாா்களில் விற்பனை செய்யப்படுகிற மது வகைகள் மற்றும் பாா்கள் சட்டப்படியும், விதிகளுக்கு உள்பட்டும் இயங்குகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அதிகாரிகள் சோதனைகளுக்கு வருவது அறிந்து தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பாா்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதிகளுக்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகள் திரும்பி வந்தனா். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதமாக செயல்பட்ட பாா்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளா் சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4 குழுக்களாக சென்று சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் பாா்கள் செயல்படுகிறதா என ஆய்வு செய்தோம். இதில் 30 பாா்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த பாா்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து பல்வேறு பகுதிகளில் பாா்கள் திறக்கப்படவில்லை. இந்த பாா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த பாா்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும். இதில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    • முறைகேடாக டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட டாஸ்மாக்மேலாளருக்கு புகார்கள் வந்தன.
    • டாஸ்மாக் அதிகாரிகள் கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 250 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கடையின் அருகே பார்களும் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களில் முறைகேடாக டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட டாஸ்மாக்மேலாளருக்கு புகார்கள் வந்தன.

    அந்தப் புகாரின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

    அந்த சோதனையில் மாவட்டத்தில் 19 இடங்களில் முறைகேடாக பார்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை பூட்டி சீல் வைத்தனர். மேலும் முறைகேடாக டாஸ்மாக் பார் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு போலீசருக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×