search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் பார்
    X
    டாஸ்மாக் பார்

    பார்களில் கரைபுரண்ட உற்சாக வெள்ளம் - மது பிரியர்கள் முகத்தில் புன்னகை பிரகாசம்

    தமிழகம் முழுவதும் 2,802 பார்கள். சென்னையில் மட்டும் 270 பார்கள் உள்ளன. இந்த பார்கள் அனைத்தும் இன்று திறந்ததும் 18 மாதங்களுக்கு முந்தைய காட்சிகள் திரும்பியது.
    சென்னை:

    பார்... பார்... என்று மதுக்கடை பார்களை திரும்பி பார்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உற்சாக பானமும், உற்சாகமாக பார்களும் களைகட்டியது.

    18 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறந்ததால் குழந்தைகள் முகங்களில் மகிழ்ச்சி கரைபுரண்டதை பார்க்க முடிந்தது. அதே போல் தமிழகம் முழுவதும் பார்கள் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

    தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பார்கள் உள்ளன. பார்கள் மூடப்பட்டிருந்த போது குடிமகன்கள் திண்டாடிப்போனார்கள். குடிக்காமல் இருக்கவும் முடியவில்லை. அதேநேரம் குதூகலமாக குடித்து கொண்டாடுவதை அவசர அவசரமாக குடித்துவிட்டு ஓட வேண்டி இருக்கிறதே என்று நேற்றுவரை சலித்துக் கொண்டார்கள்.

    புறநகர் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் கொஞ்சம் பரவாயில்லை பாட்டில்களை வாங்கி வயல் வெளிகள், தோட்டம், காடுகள், தோப்புகளில் அமர்ந்து குடித்தார்கள்.

    ஆனால் நகர குடிமகன்கள்தான் அல்லாடி போனார்கள். பாட்டில்களை வாங்கி பக்கத்து பெட்டிக்கடைகள், ரோட்டோரங்களில் வைத்து, சந்துகளில், கிடைத்த ஒதுக்கு புறங்களில் நின்று அவசர அவசரமாக குடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். வேறு வழி இல்லாமல் கடந்த 18 மாதங்களாக அப்படித்தான் சமாளித்து கொண்டார்கள்.

    அதிலும் இன் பண்ணிய பேன்ட்-சட்டையுடன் டிப்- டாப்பாக இருப்போரும் வெட்கத்தை விட்டு ரோட்டோரத்தில் நின்றே தங்கள் போதை மோகத்தை தீர்த்துக் கொண்டார்கள்.

    தமிழகம் முழுவதும் 2,802 பார்கள். சென்னையில் மட்டும் 270 பார்கள் உள்ளன. இந்த பார்கள் அனைத்தும் இன்று திறந்ததும் 18 மாதங்களுக்கு முந்தைய காட்சிகள் திரும்பியது.

    மதுபான கடையில் விரும்பிய வகை மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு பார்களுக்குள் சென்றார்கள். உள்ளே நேர்த்தியாக மேசைகள், இருக்கைகள் போடப்பட்டு ஊதுவத்தி மணம் வேறு.

    இப்படி உட்கார்ந்து குடிச்சி எவ்வளவு நாளாச்சு... வந்து அமர்ந்தோமா... கிளாசுக்குள் ஒரு கட்டிங்கை ஊற்றி தண்ணீர் பாக்கெட்டில் சிறு துணை போட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து... அது அப்படியே நுரை பொங்க கிளாசின் மேற்பகுதிக்கு வரும்... நுரை நீங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்திருந்து, கிக் ஏறாவிட்டால் மேலும் ஒரு குவார்ட்டரை வாங்கி வரச்சொல்லி... கடலை, ஆம்லெட், சாலட், சிக்கன் என்று விதவிதமாக ஆர்டர் செய்து.... ஒரு மடக்கு குடித்ததும் ‘சைடிஸ்’ எடுத்து சுவைக்கும் போது எவ்வளவு ரசனையாக இருந்தது.

    தண்ணீர் பாக்கெட் தீர்ந்து விட்டால் தண்ணீர் பாக்கெட் வாங்கிவரச் சொல்லியும்... அப்படியே இரண்டு ஐஸ் கியூபையும் எடுத்துவரச் சொல்லி அதனுள் போட்டு குடிக்கும் போது... ஆகாயத்தில் பறந்தது போல் அல்லவா இருக்கும்!

    அதிலும் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கும் போது மச்சான்... இந்த சரக்கு சரியில்லடா காலையில் எழும்பும் போது தலை பாரமாக இருக்கும் என்று அனுபவத்தை பகிர்ந்தபடி குடித்து மகிழ்வது தனி சுகம்.

    ஆக மொத்தத்தில் மது வெள்ளமும், உற்சாக வெள்ளமும் சேர்ந்து இன்று பார்களில் கரைபுரண்டு ஓடியது. அதில் நீந்தி மகிழ்ந்த குடிமகன்களின் முகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அப்படி ஒரு பிரகாசம் தெரிந்தது.

    Next Story
    ×