அனுமதியின்றி செயல்பட் 19 டாஸ்மாக் பார்களுக்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை

முறைகேடாக டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட டாஸ்மாக்மேலாளருக்கு புகார்கள் வந்தன.டாஸ்மாக் அதிகாரிகள் கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் 250 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கடையின் அருகே பார்களும் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களில் முறைகேடாக டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட டாஸ்மாக்மேலாளருக்கு புகார்கள் வந்தன.

அந்தப் புகாரின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் மாவட்டத்தில் 19 இடங்களில் முறைகேடாக பார்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை பூட்டி சீல் வைத்தனர். மேலும் முறைகேடாக டாஸ்மாக் பார் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு போலீசருக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com