search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
    X
    டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

    ஜனவரி 5-ந்தேதி டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

    டாஸ்மாக் பணி நேரம் மாற்ற உத்தரவு காரணமாக பணியாளர்களுக்கு பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே நேர மாற்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
    சென்னை:

    தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி, பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு முககவசம், கையுறை, சானிடைசர், கிருமிநாசினி உள்ளிட்ட நோய் தடுக்கும் உபகரணங்கள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டும் இதுவரை வழங்கப்படவில்லை.

    டாஸ்மாக் கடைகளில் பணி நிரப்பல் மூலம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பாதுகாப்பு பெட்டகம் அனைத்து கடைகளுக்கும் வழங்க வேண்டும்.

    மேலும் நேரம் மாற்ற உத்தரவு காரணமாக பணியாளர்களுக்கு பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே நேர மாற்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    தமிழக அரசு

    ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்கள் சட்டசபை தொடங்கும் நாளான ஜனவரி 5-ந் தேதியன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கூட்டம் துணை தலைவர் பொன் பாரதி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒமைக்ரான் புதிய வகை தொற்று பரவி வரும் நிலையில் கடைகளை இரவு 10 மணிவரை இயங்க அனுமதித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

    அனைத்து ஊழியர்களுக்கும் சுழற்சி முறை பணியிட மாறுதலை அமல்படுத்த வேண்டும். பார் உரிமைதாரர்கள் கடை நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. ஊழியர்களை மிரட்டுவது, தாக்குவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சட்ட நடவடிக்கைக்கு மாறாக தண்டனைகள், அபராதம், வட்டி, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்.

    இதை கண்டித்து வருகிற 7-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர் துறை அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக பொது செயலாளர் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×