என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வாலிபர் பிணம்
  X
  வாலிபர் பிணம்

  பாபநாசம் பஸ் நிலையத்தில் வாலிபர் பிணம்: போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாபநாசம் பஸ் நிலையத்தில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பாபநாசம்:

  பாபநாசம் பழைய பேருந்து நிலையம் முன்பு 36 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

  இதுகுறித்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

  அப்போது இறந்து கிடந்தவர் கும்பகோணம் கொரநாட்டு கருப்பூர் சந்தனள்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த அருளானந்தராஜ் (வயது 36) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், தனது தங்கை வீட்டுக்கு செல்வதாக கூறி சென்று பஸ் நிலையத்தில் இறந்து கிடந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

  இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அருளானந்த ராஜ் எப்படி இறந்தார்? என்று விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

  Next Story
  ×