search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழ்நாட்டில் இதுவரை நடந்த 7 கட்ட மெகா முகாமில் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி- அமைச்சர் தகவல்

    5 முறை மெகா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட்டது. மது அருந்துவோரும், இறைச்சி உணவு உண்போரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவதாக கருத்து நிலவியதால், கடந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 32,205 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    இந்த மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் 2-வது தவணை செலுத்தப்படுகிறது.

    5 முறை மெகா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட்டது. மது அருந்துவோரும், இறைச்சி உணவு உண்போரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவதாக கருத்து நிலவியதால், கடந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

    7-வது கட்ட தடுப்பூசி முகாமும் சனிக்கிழமை (நேற்று) நடந்தது.

    தமிழ்நாடு முழுவதும், நேற்று நடந்த 7-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 17 லட்சத்து 14 ஆயிரத்து 111 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    கொரோனா தடுப்பூசி

    இதில் முதல் தவணையாக 6 லட்சத்து 26 ஆயிரத்து 955 பயனாளிகளுக்கும் 2-வது தவணையாக 10 லட்சத்து 87 ஆயிரத்து 156 பேருக்கும தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் இதுவரை நடந்த 7 கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 1 கோடியே 50 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    செப்டம்பர் 12-ந் தேதி நடந்த முதல் முகாமில் 28.91 லட்சம் பேருக்கும், செப்டம்பர் 19-ந் தேதி நடந்த 2-வது முகாமில் 16.43 லட்சம் பேருக்கும், 3-வது முகாமில் (செப்.26) 25.04 லட்சம் பேருக்கும், 4-வது சுற்றில் (அக்டோபர் 3) 17.04 லடசம் பேருக்கும், 5-வது முகாமில் (அக். 10) 22.85 லட்சம் பேருக்கும், 6-வது முகாமில் (அக். 23) 23.27 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது.

    சென்னை, காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று நடந்த தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இதையும் படியுங்கள்... வேலை உறுதித்திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

    Next Story
    ×