search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதை காணலாம்
    X
    கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதை காணலாம்

    நவராத்திரியையொட்டி கரூரில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரம்

    நவராத்திரியையொட்டி கரூரில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    கரூர்:

    நவராத்திரி விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கரூரில் உள்ள கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள கடைகளில் பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து கடை வியாபாரிகள் கூறியதாவது:-

    நவராத்திரியையொட்டி கொலு பொம்மை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொலு பொம்மைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டை விட தற்போது அதிகளவில் விற்பனை ஆகிறது. தனி பொம்மைகள் ரூ.50 முதல் ரூ.450 வரையும், செட் பொம்மைகள் ரூ.500 முதல் ரூ.1,400 வரையும் விற்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து வகையான சாமி பொம்மைகள், திருமண நிகழ்ச்சி, கிருஷ்ணர் லீலை பொம்மைகள், கச்சேரி பொம்மைகள், வரலாறு சார்ந்த பொம்மைகள், தொழிலாளர்கள் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×