என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
  X
  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

  பள்ளிகள் திறப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  1-ம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க கோரி தனியார் பள்ளிகள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
  கோவை:

  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிகோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

  1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இதுவரை பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை. இது தொடர்பான ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  கோப்புப்படம்

  1-ம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க கோரி தனியார் பள்ளிகள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். தற்போது பெற்றோர்கள் மத்தியில் கொரோனா அச்சம் உள்ளது. இதனால் 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
  கொரோனா
  பரவல் கட்டுக்குள் இருப்பதை பொருத்தே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

  கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உதவ வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது சம்பந்தமாக அரசுடன் ஆலோசித்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×