என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வலி நிவாரணிக்காக பயன்படுத்தும் மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்யும் கும்பல் மற்றும் பயன்படுத்தும் இளைஞர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
  கோவை:

  கோவை மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரை பயன்படுத்தும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  இளைஞர்களை குறி வைத்து வலி நிவாரணிக்காக பயன்படுத்தும் மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்யும் கும்பல், மற்றும் பயன்படுத்தும் இளைஞர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் மாநகரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்து வருகிறனர். இந்தநிலையில் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் சில வாலிபர்கள் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக பெரியக்கடை வீதி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

  இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த சாரமேட்டை சேர்ந்த யாசர் ராவத் (வயது 23), கரும்புக்கடையை சேர்ந்த ரிஸ்வான் (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 10 போதை மாத்திரைகள், 2 ஊசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
  Next Story
  ×