என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  உள்ளாட்சி தேர்தல் - புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் முறையாக அறிவிப்பு செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் 19 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கல் நடந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் முறையாக அறிவிப்பு செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

  இந்தநிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க வசதியாக கட்டுப்பாட்டு அறை திறக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

  அதன்படி கலெக்டர் அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில் 328ம் எண் அறையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

  அங்கு 1800 425 7023 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 0421 2971494 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×