என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலைஞர் பல்லாண்டுகளில் பெற்ற புகழை 100 நாட்களில் பெற்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: துரைமுருகன் புகழாரம்
Byமாலை மலர்15 Sep 2021 4:23 PM GMT (Updated: 15 Sep 2021 4:23 PM GMT)
பெரியார், அண்ணா, தி.மு.க. தொடங்கப்பட்ட தினம் ஆகிய நிகழ்வுகளை இணைந்த தி.மு.க.-வின் முப்பெரும் விழாவில் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, தி.மு.க தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளும் இணைந்த தி.மு.கவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
பெரியார் விருதை மிசா பி.மதிவாணனுக்கும், பேரறிஞர் அண்ணா விருதை எல்.கே.மூக்கையாவிற்கும், கலைஞர் விருதை கும்மிடிபூண்டி கீ.வேணுவிற்கும், பாவேந்தர் விருதை வாசுகி ரமணனுக்கும், பேராசிரியர் விருதை பா.மு. முபாரக்கிற்கு முதலமைச்சர் வழங்கினார்.
விழாவில் பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அண்ணாவிடம் கலைஞர் கேட்டுப்பெற்ற இதயத்தை, அவரிடம் கேட்காமலேயே தளபதி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும், இந்தியாவின் எட்டு திக்கிலும் நமது முதலமைச்சர் பற்றியே மக்கள் பேசுவதாக கூறினார்.
கலைஞர் முதலமைச்சரான பின்பு பல்லாண்டுகளில் பெற்ற புகழை 100 நாட்களில் பெற்றவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார். மேலும் விருது பெற்றவர்கள் போன்ற பலர் இருப்பதால், இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது எனக்கூறினார்.
Next Story
×