என் மலர்

  செய்திகள்

  ஆர்.என்.ரவி
  X
  ஆர்.என்.ரவி

  தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி செப்டம்பர் 17ல் பதவி ஏற்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் இன்று பஞ்சாப் புறப்பட்டுச் செல்கிறார்.
  சென்னை:

  தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி பொறுப்பு ஏற்றார். இவர், பஞ்சாப் மாநில ஆளுநராக சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து பஞ்சாப் புறப்பட்டுச் செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைக்க உள்ளனர்.

  இதற்கிடையே, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  இந்நிலையில், ஆர்.என்.ரவி நாளை மறுதினம் சென்னை வருகிறார். தமிழகத்தின் 15-வது ஆளுநராக அவர் செப்டம்பர் 17ம் தேதி அன்று பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
  Next Story
  ×