search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக ஆளுநர்"

    • தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி.
    • ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவைல அளிக்கும் விதமாக இருப்பதாக கருத்து.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தது.

    ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவைல அளிக்கும் விதமாக இருப்பதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார்.

    24 மணி நேரத்திற்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால், தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    ஆளுநருக்கு காலக்கெடு விடுக்கப்பட நிலையில், இன்று காலை 9 மணிக்கு திமுக எம்எல்ஏ பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு.
    • உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆர்.என். ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் போல நடந்து கொள்வதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையில் செயல்படுகிற பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக ஆளுநராக ஆர்.என்.வி நியமிக்கப்பட்டது முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார். கடந்த காலங்களில் தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு.

    ஆனால், அரசமைப்புச் சட்ட உறுப்பு 163(1)-ன்படி அமைச்சரவையின் ஆலோசனையோ, அறிவுரையோ இன்றி தன்னிச்சையாக ஆளுநர் செயல்பட முடியாது என்று தெளிவாக கூறுகிறது. இதில் அவருக்குள்ள விருப்புரிமை மிகமிக குறைவானதே ஆகும். இந்நிலையில் தமிழக சட்டப்போவை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் முடக்கி வருகிறார். இது அப்பட்டமான தமிழக விரோத செயலாகும்.

    சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துக் கடந்த 11 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி நீடிக்கிறார் என்று சட்டப்பேரவை சபாநாயகர் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். இதனடிப்படையில் ஆளுநர், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு "உச்சநீதிமன்றம் அவரை நிரபராதி என்று தீர்ப்பு வழங்கவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்கின்றன. எனவே, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது" என்று ஆளுநர் பதில் கூறியிருந்தார். ஆளுநரின் இந்த செயல் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் கொந்தளிக்க செய்தது. அரசமைப்புச் சட்டப்படி ஓர் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆர்.என். ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் போல நடந்து கொள்வதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பிறகு பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டரீதியாக தடை எதும் இல்லாத நிலையில் தி.மு.க. மீது ஆளுநருக்கு உள்ள வன்மத்துடன் , வேண்டுமென்றே பதவி பிரமாணம் செய்து வைக்காமல் சண்டித்தனம் செய்து வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இந்நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பதை மறுக்கும் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.இதன்படி உறுப்பு 154, உட்பிரிவு 1-ஐ ஆளுநர் அப்பட்டமாக மீறுவதாக முறையிடப்பட்டது. முதல்வர் பரிந்துரைத்த பின்பும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்து வருவது சட்டவிரோதம் என கூறப்பட்டது.

    இதனை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், "உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று அவர் எப்படி கூற முடியும்? இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநருக்கு நாளை வரை அவகாசம் வழங்குகிறோம். இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆளுநருக்கு எதிராக கடுமையான கேள்விக் கணைகளை எழுப்பி எச்சரித்திருக்கிறது.

    இதற்குப் பிறகும் பொன்முடி அமைச்சராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை என்றால் ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை தூக்கி எறிகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.

    எனவே, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையிலும் செயல்படுகிற பா.ஜ.க.யின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என் ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். இதனை பா.ஜ.க. அரசு செயல்படுத்தவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

    • ஆளுநர் ஆர்.என். ரவி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும்.
    • ஆளுநர் மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்ற அவமதிப்பாகவும் கொள்ள வேண்டியுள்ளது.

    பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி மூன்று நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    முதல்வர் பரிந்துரையை ஏற்று நேற்று பதவி பிரமாணம் செய்து வைப்பார் என திமுக-வினர் எதிர்பார்த்தனர். ஆனால் பொன்முடி அமைச்சராவதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் திமுக எம்.பி. வில்சன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆளுநர் ஆர்.என். ரவி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும். ஆளுநர் மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்ற அவமதிப்பாகவும் கொள்ள வேண்டியுள்ளது. அமைச்சராக நியமிக்கப்படுபவர்களின் தகுதிப்பாடு குறித்த முதலமைச்சரின் மதிப்பீட்டை ஆளுநர் கேள்வி எழுப்ப முடியாது.

    தமிழக அரசுடன் ஆளுநர் கடைப்பிடிக்கும் மோதல் போக்கு கொஞ்சமும் வியப்பளிக்கவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு மாநில அரசுக்கு இணையாக இன்னொரு அரசை நடத்த ஆளுநர் முயற்சி. அரசியலமைப்பு, சட்டங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்காத ஆளுநர் உடனே பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசு தலைவர் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு திமுக எம்.பி. வில்சன் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

    • நான்கு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
    • மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு எனத் தகவல்.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை ஆறு மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்றுள்ள அவர் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    நான்கு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்தார். என்றபோதிலும் கவர்னர் உரை அப்படியே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அவர் பேசிய சில கருத்துகள் நீக்கப்பட்டன.

    இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி சென்றுள்ளார்.

    • மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.
    • இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டி தமிழ்நாடு அரசு மாண்பமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.

    அவ்வழக்கில், தமிழ்நாடு ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக முதலமைச்சர் அவர்களோடு ஆலோசனை நடத்திட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததன் அடிப்படையில், ஆளுநர் அவர்கள் முதலமைச்சர் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.

    ஆளுநர் அவர்களின் அழைப்பினையேற்று, முதலமைச்சர் இன்று (30.12.2023) ஆளுநர் மாளிகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர்எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆகியோருடன் ஆளுநரைச் சந்தித்தார்.

    ஆளுநருடனான இச்சந்திப்பின்போது, பல மாதங்களாக ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று முதலமைச்சர் ஆளுநரிடம் வலியுறுத்தினார்.

    அதேபோன்று, தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திடவும் ஆளுநர் அவர்களை, முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

    ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் வழங்க இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது. இதில் கே.சி. வீரமணி அவர்கள் தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தொடர்பான கோப்பினை 7 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநர் அவர்கள் நிலுவையில் உள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பானது குறித்தும், மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள கோப்பும், நீண்ட காலமாக ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டு அவற்றிற்கு ஒப்புதல் அளித்து திரும்ப அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

    பொதுவாக, அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் அவர்கள் செயல்பட வேண்டுமென்றும், அப்போதுதான் மாநில மக்களின் நலனுக்கும், நிருவாகத்திற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் ஆளுநர் அவர்களது செயல்பாடு அமையும் என்றும் முதலமைச்சர், ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைத்தார்.

    ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக அவர் கோரிய அனைத்து விவரங்களும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் ஆளுநர் அவர்களுக்கு நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை ஆளுநர் அவர்கள் மனதில் கொண்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்றும், வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை தவிர்த்திட வேண்டுமென்றும் ஆளுநர் அவர்களை கேட்டுக் கொண்டார்.

    முதலமைச்சர், ஆளுநர் இந்த ஆலோசனையின் போது, அரசின் சார்பாக மேற்படி கருத்துக்களை முதலமைச்சரும், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் விரிவாக எடுத்துக் கூறினர்.

    முதலமைச்சர் அவர்கள் ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் அப்போது வழங்கினார். இக்கடிதத்தில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின் மீதும் தனக்கு மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    • சில முகவர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டு மொத்த நிலைமையை மதிப்பிடாதது குறித்து கவலையை எழுப்பினர்.
    • தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்- அமைச்சர்

    மிச்சாங் புயலைத் தொடர்ந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் தென்மாவட்டங்களான திருநேல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 100 வருடங்கள் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித்தீர்த்தது.

    கனமழையுடன் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் குளங்கள், கால்வாய்கள் உடைத்து கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.

    தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட முப்படைகளும் மீட்புப் பணியில் களம் இறங்கியுள்ளன. மாநில அரசும் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களில் களத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று தென்மாவட்ட மழை வெள்ளம் பாதிப்பு, மீட்புப்பணி குறித்து தமிழக ஆளுநர் மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப்படைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனைக்கப் பிறகு ஆளுநர் மாளிகையில வெளியிட்ட அறிக்கையில் "தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் தங்கள் வளங்களை மாநில அரசின் வசம் வைத்து, மாநிலம் கோரும்போது செய்து வருகின்றன. அவர்கள் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குகிறார்கள்.

    சில முகவர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டு மொத்த நிலைமையை மதிப்பிடாதது குறித்து கவலையை எழுப்பினர். மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கூடுதல் ஆதாரங்களைத் திரட்டுமாறு ஆளுநர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கு பதில் அளித்த தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, "மத்திய அரசின் மீட்பு துறைகளுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருந்தது. வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். களத்தில் உள்ள அனைவருக்கும் முதலமைச்சர் அறிவுரைகளை வழங்கி வருகிறார்" என்றார்.

    • சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு.
    • நாளைமறுநாள் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது.

    தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மீது நீண்ட நாட்களாக ஆளுநர் ஆர்.என். ரவி நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்.

    இதுபோன்று பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர்கள் ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். பஞ்சாப் மாநிலம் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தது. பின்னர் தமிழக அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    பஞசாப் மாநிலம் தொடர்ந்த வழக்கில் ஆளுநர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    வருகிற சனிக்கிழமை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆளுநர் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை தலைமை செயலகத்திற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு திருப்பி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.

    ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள்:-

    1 சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

    2 தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா

    3 தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

    4 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    5 தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா

    6 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    7. தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    8. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    9. அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    10. அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா

    • தீபாவளியை கொண்டாட பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய மக்கள் நேற்று முதலே ரெயில், பேருந்துகளில் புறப்பட தொடங்கியுள்ளனர்.
    • ஆளுநர் ஆர்.என் ரவி தமிழில் வாழ்த்துச் செய்தி கூறும் அந்த வீடியோ ராஜ் பவனின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக தமிழகத்தில் தலைநகர் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய மக்கள் நேற்று முதலே ரெயில், பேருந்துகளில் புறப்பட தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழில் பேசி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

    ஆளுநர் ஆர்.என் ரவி தமிழில் வாழ்த்துச் செய்தி கூறும் அந்த வீடியோ ராஜ் பவனின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    • கிரிவலம் மேற்கொள்ளும் ஆளுநர், நாளை காலை சாமி தரிசனம்
    • பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடுகிறார்

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருவண்ணாமலை செல்கிறார். திருவண்ணாமலை செல்லும் அவர் சாதுக்கள், ஆன்மிக குருக்களை சந்திக்க இருக்கிறார். பின்னர் இயற்கை விவசாயிகளுடன் உரையாடுகிறார்.

    தொடர்ந்து கிரிவலம் மேற்கொள்ளும் அவர், நாளை காலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பல்வேறு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடுகிறார். செஞ்சி கோட்டை உள்ளிட்ட இடங்களை பார்வையிடுகிறார். பின்னர் சென்னை திரும்புகிறார்.

    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
    • ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இதற்கிடையே, அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் குறித்த புகாருக்கு முறையான பதிலைத் தராமல் மழுப்பலான பதிலை ஆளுநர் அளித்துள்ளார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்ற நினைக்கிறார். தான் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் பதில் கடிதம் அனுப்பவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளது என தெரிவித்தார்.

    • சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

    அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது.

    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
    • ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, கவர்னர் அரசை விமர்சிப்பது மரபு அல்ல என்றார்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்திப்பது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழக ஆளுநர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தால் என்னை விட மகிழ்ச்சியான ஆள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.

    தி.மு.க.வின் வண்டவாளம், தண்டவாளம் வெளியே வரும். ஆனால் சந்திக்கக் கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு.

    காரணம் என்னவென்றால், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.

    ஆளுநர் நேர்மையான முறையில் விமர்சிக்க வேண்டியது சட்டசபையில்தான். சட்டசபையில் விமர்சித்துக் கொள்ளலாம். ஆளுநர் என்பவர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கலாம். ஆனால் ஆளுநர் தினம் தினம் என்னைப் போல சந்தித்து பேட்டி கொடுத்தால், அந்த பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும் என தெரிவித்தார்.

    ×