search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வடபழனியில் விடுதியில் தங்கி கடைகளுக்கு குட்கா சப்ளை செய்த 2 பேர் கைது

    வடபழனி அருகே விடுதியில் தங்கி கடைகளுக்கு குட்கா சப்ளை செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வடபழனி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து நடந்த அதிரடி சோதனையில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மேலும் கடைகளுக்கு குட்கா சப்ளை செய்பவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ், ஏட்டு வெங்கடப்பன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள கடைக்கு குட்கா சப்ளை செய்ய வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது அபுதாகிர், பைசல் ரகுமான் என்பது தெரிந்தது.

    இருவரும் சேப்பாக்கம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி அடிக்கடி பெங்களூர் சென்று குட்கா பொருட்களை கடத்தி வந்து ஆர்டரின் பேரில் சென்னையில் உள்ள பல்வேறு கடைகளுக்கு தொடர்ந்து குட்கா சப்ளை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

    இருவரையும் போலீசாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். விடுதியில் பதுக்கி வைத்து இருந்த குட்கா மற்றும் சப்ளைக்கு பயன்படுத்தி வந்த 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×