search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை பேராட்சி அம்மன் கோவில் முன்பு பெண்கள் சிறப்பு பூஜை நடத்தி புதுதாலிக்கயிறு அணிந்த காட்சி.
    X
    நெல்லை பேராட்சி அம்மன் கோவில் முன்பு பெண்கள் சிறப்பு பூஜை நடத்தி புதுதாலிக்கயிறு அணிந்த காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் களை இழந்த ஆடிப்பெருக்கு

    குறுக்குத்துறை முருகன் கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றிலும் இன்று பெண்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. சில பெண்கள் மட்டும் வழிபட்டு புதிய தாலி அணிந்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் ஆடிப்பெருக்கு வழக்கமாக சிறப்பாக கொண்டாடப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் கூடவும், முக்கிய கோவில்களில் தரிசனத்திற்கும் நெல்லை மாவட்டம் நிர்வாகம் தடை விதித்தது.

    இதையடுத்து ஆடிப்பெருக்கு தினமான இன்று பாபநாசம் கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக இந்த கோவிலில் ஏராளமான பெண்கள் சிறப்பு பூஜை நடத்தி, புதுத்தாலி அணிவார்கள்.

    ஆனால் இன்று பக்தர்ளுக்கு தடைவிதிக்கப்பட்டதால் சிறப்பு பூஜைகள் நடத்த பெண்கள் கோவிலுக்கு செல்லவில்லை. சில பெண்கள் மட்டும் தாமிரபரணி ஆற்றில் நீராடி புதுத்தாலி அணிந்தனர்.

    குறுக்குத்துறை முருகன் கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றிலும் இன்று பெண்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. சில பெண்கள் மட்டும் வழிபட்டு புதிய தாலி அணிந்தனர்.

    வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகே விமர்சையாக நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா இன்று களையிழந்து காணப்பட்டது. தடை உத்தரவு காரணமாக பெரும்பாலான பெண்கள் இன்று கோவிலுக்கு சென்று விசே‌ஷ பூஜைகள் நடத்தவில்லை. சிலர் மட்டும் தாங்களாகவே கோவிலில் வழிபட்டு, தாமிரபரணி ஆற்றில் நீராடி புதுத்தாலி அணிந்தனர்.

    பாபநாசம் கோவில் மற்றும் தாமிரபரணி ஆற்றுபகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்டமாக சென்று நீராட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

    குறுக்குத்துறை முருகன் கோவில் பகுதியிலும், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் பகுதியிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    Next Story
    ×