search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சென்னை சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

    மாட்டின் உரிமையாளர்கள் 10 நாட்களுக்குள் மாடுகளை மீட்காவிட்டால் புளு கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுபோல மாடுகளும் பெருகி உள்ளன.  சாலையில் சுற்றித் திரியும் இந்த மாடுகளால் விபத்துகளும் ஏற்படுகின்றன.

    கோயம்பேடு, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, கொடுங்கையூர், மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இதன் உரிமையாளர்கள் யார் என்பது தெரியாமல் சாலைகளில் மாடுகள் வலம் வருகின்றன. இதில் பெரும்பாலானவை வங்கிகளில் கடன் பெற்று வாங்கப்பட்டவை. இந்த மாடுகள் சாலையில் அவிழ்த்துவிடப்பட்டு இரவு- பகலாக சுற்றி வருவதால்,  இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலையும் இது ஏற்படுத்துகிறது. மாடுகள் வரிசையாக சாலையை கடக்கும்போது வாகனங்கள் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.  மாட்டின் உரிமையாளர் மீது அபராதம் விதிக்கப்படுகிறது.  

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, கடந்த 2 வாரமாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பறிமுதல் செய்யும் பணி நடந்து வருகிறது. கோயம்பேட்டில் 21 பசு மற்றும் எருமை மாடுகள் பிடிக்கப்பட்டன. அவை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள பாதுகாப்பு மையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    கோப்புபடம்

    மாட்டின் உரிமையாளர்கள் 10 நாட்களுக்குள் வந்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். வராதபட்சத்தில் புளு கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து இதுபோன்ற தவறு இனி நடக்காது என்று விளக்கக் கடிதமும் பெறப்படுகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×