என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கூடுதல் தளர்வுகளை, மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்
Byமாலை மலர்29 Jun 2021 7:02 AM GMT (Updated: 29 Jun 2021 7:02 AM GMT)
தமிழகமும் கடந்த ஒன்றரை ஆண்டாக கொரோனா நோயின் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா என்ற கொடிய நோயின் தாக்கத்தால் உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழகமும் கடந்த ஒன்றரை ஆண்டாக கொரோனா நோயின் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது.
கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது, பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் தான் முதன்மையானதாக இருக்க வேண்டும்.
கொரோனாவுக்கு எதிராக மற்றும் மக்கள் நலனுக்காக கட்டுப்பாடுகள் விதித்து, தளர்வுகள், பிறகு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கும்போது மக்கள் அந்த கட்டுப்பாடுகளையும், கூடுதல் தளர்வுகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.
தமிழக அரசு கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வை விரைவுபடுத்த வேண்டும், தடுப்பூசி தட்டுப்பாடும் இருக்கக்கூடாது.
குறிப்பிட்ட காலத்திற்குள் ஊர் ஊராக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை முறையாக, முழுமையாக செய்து முடிக்க வேண்டும். பொதுமக்களும் கொரோனாவினால் பாதிக்கப்படக்கூடாது, விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.
எனவே தமிழக மக்களே கசப்பான இந்த பாதிப்பான கொரோனா காலத்தில் இருந்து நாமெல்லாம் தப்பித்து, நல்வாழ்க்கை வாழ அரசின் கூடுதல் தளர்வுகளை முறையாக பயன்படுத்துவோம், கட்டுப்படுவோம், ஒத்துழைப்போம். குடும்பத்தைக் காப்பாற்றுவோம், நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபடுவோம்.

Next Story
×