search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் தாக்கியதில் உயிரிந்த முருகேசன்
    X
    போலீஸ் தாக்கியதில் உயிரிந்த முருகேசன்

    போலீஸ் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த விவகாரம்- டிஐஜிக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

    சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில், போலீஸ் தாக்கியதில் வியாபாரி முருகேசன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை சஸ்பெண்ட் செய்து சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் சட்டசபையில் இன்று எதிரொலித்தது. போலீசாரால் தாக்கப்பட்டு முருகேசன் உயிரிழந்தது தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்ததுடன், உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக கூறினார். தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின்

    இந்நிலையில், வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க தொடங்கி உள்ளது. நடந்த சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×