search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி உயிரிழப்பு"

    • தாமஸ் ஜக்காரியா வாசனை திரவியம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
    • தாமஸ் ஜக்காரியா இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.

    போரூர்:

    ராமாபுரம், மைக்கேல் கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் ஜக்காரியா (வயது 54). வாசனை திரவியம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவரது வீட்டில் இருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ராமாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது படுக்கை அறையில் தாமஸ் ஜக்காரியா உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. மனைவி பிரிந்து சென்றதால் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்து உள்ளார்.

    இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×