search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சை அருகே மது கடத்திய 5 பேர் கைது

    தஞ்சை-புதுக்கோட்டை மாவட்ட எல்லை அருகில் உள்ள வல்லம் புதூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    வல்லம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 27 மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    அந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், சலூன்கள், டீக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் இல்லாமல் தொடர்ந்து வருகிறது.

    தஞ்சை உட்பட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தஞ்சை பகுதியை சேர்ந்த மது பிரியர்கள் திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது வாங்கி வருகின்றனர்.

    சிலர் மதுபாட்டில்களை அதிகளவில் கடத்தி வந்த தஞ்சை பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனைக்கு செய்து வந்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தஞ்சை-புதுக்கோட்டை மாவட்ட எல்லை அருகில் உள்ள வல்லம் புதூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வெளி மாவட்டத்தில் இருந்து மது கடத்தி வந்ததாக 5 பேரை போலீசார் பிடித்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வல்லம் போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 170 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×