search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    34 மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு- பல்லாயிரக்கணக்கானோர் ஏமாற்றம்

    தமிழகத்தில் இதுவரை 97 லட்சத்து 35 ஆயிரத்து 420 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 3 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளன.
    சென்னை:

    கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டால் நோய் தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு என்றும் எனவே பொதுமக்கள் தடுப்பூசியை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

    கொரோனாவை வெல்லும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்கிற விழப்புணர்வு பிரசாரமும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சில வாரங்களாகவே மக்கள் மத்தியில் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 18 வயதில் இருந்து 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளுக்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் முழுமையாக போடப்பட்டுவிட்டன.

    சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்

    இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை. மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே இந்த மாவட்டங்களில் இனி தடுப்பூசி போட முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 97 லட்சத்து 35 ஆயிரத்து 420 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 3 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. தற்போது சென்னை மற்றும் கோவையில் மட்டுமே சில இடங்களில் தடுப்பூசி உள்ளது. 22 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருக்கிறது.

    மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வரப்பெற்ற உடன் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.

    தடுப்பூசி முற்றிலுமாக இல்லாமல் இருக்கும் நிலையில் 34 மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஊசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்று பல இடங்களில் ஊசி போட சென்ற பலர் திரும்பச் சென்ற நிலையில் இன்றும் 2-வது நாளாக தடுப்பூசி கிடைக்காமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×