search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    வீட்டுக்கு வீடு கொரோனா தடுப்பூசி- இந்திய மருத்துவ சங்கம் மத்திய அரசுக்கு கடிதம்

    தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சின்ன சின்ன மருத்துவக் குழுக்களை உருவாக்கி அவர்கள் மூலம் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் தடுப்பூசி முகாம்களை உருவாக்கலாம்.

    சென்னை:

    நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை வேகம் எடுத்துள்ளது. தினமும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணியை அரசு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய மருத்துவ சங்க தலைவர் ஜெயலால் கூறியுள்ளதாவது, ‘கொரோனா தடுப்பூசி வி‌ஷயத்தில் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு நேரில் சென்று தடுப்பூசி போடும் பணியை தொடங்கவேண்டும். நாடு முழுவதும் 3.56 லட்ச உறுப்பினர்கள் கொண்ட எங்கள் சங்கம் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.

    கொரோனா வைரஸ்

    தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சின்ன சின்ன மருத்துவக் குழுக்களை உருவாக்கி அவர்கள் மூலம் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் தடுப்பூசி முகாம்களை உருவாக்கலாம். இது மட்டுமே இப்போதைக்கு தீர்வாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×