search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்பட்ட பஸ்சில் பயணம் செய்த அரசு ஊழியர்களை காணலாம்.
    X
    திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்பட்ட பஸ்சில் பயணம் செய்த அரசு ஊழியர்களை காணலாம்.

    திண்டுக்கல், தேனியில் அரசு ஊழியர்களுக்கு 21 சிறப்பு பஸ்கள்

    திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டல பொதுமேலாளர் கணேசன் உத்தரவின்பேரில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் நேற்று முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அரசு துறைகளை பொறுத்தவரை வருவாய், சுகாதாரம் உள்பட சில முக்கிய துறைகளின் அலுவலகங்கள் மட்டும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படுகிறது. எனவே, அரசு ஊழியர்கள் வேலைக்கு வருவதற்கு வசதியாக சிறப்பு பஸ்களை இயக்கும்படி அரசு அறிவுறுத்தியது.

    அதன்படி திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டல பொதுமேலாளர் கணேசன் உத்தரவின்பேரில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், வேடசந்தூர், பழனி, வத்தலக்குண்டு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் செல்லும் வகையில் 9 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதேபோல் தேனி மாவட்டத்தில் கம்பம், தேனி, போடி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று 8 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ஊழியர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கூடுதலாக 4 பஸ்கள் என மொத்தம் 12 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் சிறப்பு பஸ்களில் அடையாள அட்டை வைத்திருப்பதோடு முககவசம் அணிந்து வரும் அரசு ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். முன்னதாக கைகளை சுத்தம் செய்வதற்கு அவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்படுவதோடு, உடல்வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×