search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் முக ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் முக ஸ்டாலின்

    ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது- அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

    அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மற்றும் 33 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் வகையில், நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. எனவே, கொரோனா நிலவரம், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் முதல் அமைச்சரவை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

    ரெம்டெசிவிர்


    ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்

    அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யவேண்டும்.

    அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    Next Story
    ×