search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட வடமாநில கொள்ளையன் கைது

    கோவையில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட வடமாநில கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குனியமுத்தூர்:

    கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அரிசி கடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.13 லட்சம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது திருச்சி ரோட்டில் உள்ள பல்வேறு கடைகளில் நடந்த திருட்டி பதிவாகி இருந்த கைரேகைகளும் அரிசி கடையில் திருடிச்சென்ற மர்ம நபரின் கைரேகையும் ஒரு மாதிரியாக இருந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபரை தேடி வந்தனர். அப்போது அந்த மர்ம நபர் மதுரை தெற்கு வாசல் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மர்ம நபர் ராஜஸ்தானைச் சேர்ந்த அசோக்குமார் ஜெயின் (வயது 36) என்பதும், இவர் கோவை உள்பட மதுரை, சேலம், தேவகோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    மேலும் அசோக்குமார் ஜெயின் திருடும் பணத்தை வைத்து 10 நாட்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு மீண்டும் திருடுவது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அசோக்குமார் ஜெயினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×