search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்
    X
    கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்

    அண்ணா அறிவாலயம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

    தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அண்ணா அறிவாலயம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    சென்னை:

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 

    தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின், தான் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று காலை தன் தந்தை மு.கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அங்கு தாயாரிடம் வாழ்த்து பெற்றார். கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். 

    பின்னர் அங்கிருந்து திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். 
    Next Story
    ×