search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,240-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற- தாழ்வுடன் காணப்பட்டு வந்த நிலையில் சில நாட்களாக விலை குறைந்து வருகிறது. இதனால் தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. பவுனுக்கு நேற்று முன்தினம் ரூ.280-ம், நேற்று ரூ.40-ம் குறைந்தது.

    இந்தநிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.160 குறைந்தது. ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 240-க்கு விற்றது.

    ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 405 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2,950 குறைந்து ரூ.72 ஆயிரத்து 800 ஆக உள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.72.80-க்கு விற்கிறது.

    Next Story
    ×