search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    சென்னையில் கூட்டம் அதிகரிப்பு- 15 இடங்களில் தற்காலிக தடுப்பூசி மையங்கள்

    சென்னையில் தடுப்பூசி மையங்களை மாநகராட்சி அதிகரித்துள்ளது. மண்டலத்திற்கு ஒரு மையம் வீதம் 15 மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று பரவல் ஒருபுறம் அதிகரித்த போதிலும், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது 437 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. 140 நகர ஆரம்ப சுகாதார நிலையம், 18 சுகாதார மையங்கள், அரசு, இ.எஸ்.ஐ., ரெயில்வே மற்றும் ஐ.சி.எப். ஆஸ்பத்திரிகளில் 20 மையங்கள், 171 தனியார் மருத்துவமனைகள், 88 மினி கிளினிக்குகள் இதில் அடங்கும்.

    தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் வருகிற 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி

    இதனால் தடுப்பூசி மையங்களை மாநகராட்சி அதிகரித்துள்ளது. மேலும் 15 தற்காலிக தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டலத்திற்கு ஒரு மையம் வீதம் 15 மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

    1-வது வார்டில் பாரதி நகர் சமுதாய கூடம், வார்டு 19-ல் எம்.எம்.டி.ஏ., மாத்தூர் மாநகராட்சி பள்ளி, வார்டு 25-ல் கதிர்வேடு நாராயணா பள்ளி, வார்டு 41-ல் கொருக்குபேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி.

    வார்டு 57-ல் சவுகார் பேட்டை மாநகராட்சி உயர்நிலை பள்ளி, வார்டு 70-ல் பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வார்டு 85-ல் அம்பத்தூர் அரசு ஐ.டி.ஐ., வார்டு 96-ல் அயனாவரம் மார்க்கெட் ரோடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வார்டு 109-ல் சி.பி.ராமசாமி ரோடு சமுதாயகூடம், வார்டு 132-ல் அசோக்நகர் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி.

    வார்டு 150-ல் காரம்பாக்கம் பொன்னி நகர் மாநகராட்சி சமுதாய கூடம், வார்டு 156-ல் முகலிவாக்கம், மதனந்தபுரம் மாநகராட்சி தொடக்கபள்ளி, வார்டு 175-ல் அடையார் காமராஜ் அவென்யூ மாநகராட்சி உயர்நிலை பள்ளி, வார்டு 190-ல் பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின்ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி.

    வார்டு 193-ல் துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலை ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்கள் தடுப்பூசி தற்காலிக மையங்களாக செயல்படுகின்றன.

    இந்த மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் மற்றும் 2-வது டோஸ்கள் போடப்படும். ஆனால் கோவேக்சின் தடுப்பூசி 2-வது டோஸ் மட்டுமே இங்கு செலுத்தி கொள்ளலாம்.

    Next Story
    ×