search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்னி பேருந்துகள்
    X
    ஆம்னி பேருந்துகள்

    சென்னையில் இருந்து 20 சதவீத ஆம்னி பேருந்துகள் இயக்கம்

    சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 20 சதவீத ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்கள் நோக்கி நேற்று காலை முதலே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    அரசு பேருந்துகள்
    அதேபோல ஆம்னி பேருந்துகளும் நேற்று பகல் நேர சேவையை அதிகமாக முன்னெடுத்தன. காலை 7 மணி முதலே தென்மாவட்டங்கள் உள்பட தொலைதூரங்களை நோக்கி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு பேருந்துகளை போலவே குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் பயண காலத்தை திட்டமிட்டு வெளியூர்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. பெரும்பாலும் முன்பதிவு செய்தவர்களுக்காக மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன.

    தமிழகத்தில் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படுமா? என்பதில் குழப்பம் நிலவி வந்தது.

    இந்தநிலையில் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியிருப்பதாவது:

    * சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 20 சதவீத ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    * சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு காலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்.

    * தமிழகம் முழுவதும் 2500 பேருந்துகள் இயக்கப்படும்.

    இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×